Newskadai.com
தமிழ்நாடு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

Share this:

சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால் துரைக்கு ஜூலை 24ஆம் தேதி கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சர்க்கரை நோயாளியான இவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டதால் உடல்நிலை மோசமாகி ஆகஸ்ட் 8ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இவரது மனைவி மங்கையர்திலகம் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன் கணவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், தன் கணவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவதாகவும் தனியார் மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். சிபிஐ அதிகாரிகள் இதுவரை இவரிடம் விசாரணை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த எஸ் எஸ் ஐ பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Share this:

Related posts

8ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி…!

NEWSKADAI

மருத்துவம் படித்த திருநங்கைக்கு நேர்ந்த அவலம்… போலீசார் செய்த மகத்தான உதவி ..!!!

THAVAMANI NATARAJAN

சேலம் கடைக்காரர்களே உஷார்: முன்னெச்சரிக்கை இல்லை என்றால் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கும் மாநகராட்சி…!

MANIMARAN M

இன்னும் இரண்டே நாள்: சான்று பெற்ற பணியாளர்களுக்கு மட்டும் தொடங்குகிறது அதிரடி சேவை…!

MANIMARAN M

ஆன்லைன் கல்விக்கு வழியில்லையா!? வீடு தேடி போய் அசத்தும் கோவை ஆசிரியர்…!!

THAVAMANI NATARAJAN

ஊரையே அலங்கோலமாக்கிய ஒற்றை யானை… மக்கள் அலறியடித்து ஓட்டம்..!!!

THAVAMANI NATARAJAN