Newskadai.com
தமிழ்நாடு

தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

Sarashwathi mahal
Share this:

ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களில் ஒன்று நமது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி நூலகம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இந்த நூலகம் பிற்கால சோழ மன்னர் ராஜராஜ சோழனால் தொடங்கப்பட்டது. அவருக்கு பிறகு தஞ்சையை ஆண்ட மன்னர்கள், ஆங்கிலேயர் காலங்களில் தொடர்ந்து  சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. இயல், இசை, நாடகம், மருத்துவம், கணிதம், வரலாறு, வாழ்வியல், இலக்கியம், வானவியல், ஜோதிடம் அரிய வகை புத்தகங்கள் இந்த நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலகத்தில் புத்தககங்கள் தொடர்ந்து திருடு போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Old Books

நூலகத்தை அரசு உடமையாக்கி 100 ஆண்டுகள் ஆகியும் இதற்கென்று தனியாக நிரந்தர நிர்வாக அலுவலர் நியமிக்கவில்லை. 16 ஊழியர்கள் மட்டுமே இங்கு பணிபுரிவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கு பணியாற்றும் நூலகர்கள் சுதர்சன் மற்றும் சமஸ்கிருத பண்டிதர் வீரராகவன் ஆகியோர் அரிய வகை புத்தகங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டனர் என ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். சுதர்சன் முனைவர் பட்டம் பெற்றதில் முறைகேடு செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட தமிழ் ஆகம புத்தகத்தை திருடி வெளிநாட்டிற்கு விற்பனை செய்திருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறுகையில்:

ஆங்கிலேயர் காலம் வரை சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த நூலகம் சுதந்திரத்திற்கு பிறகு தனி இயக்குநரை கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நூலகம் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.  இதற்கென்று தனி இயக்குநர் இல்லாததால் சரஸ்வதி மஹாலில் பல பொக்கிஷங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.

Olaisuvadi

குறிப்பாக அரிய மருத்துவ நூல்கள், வேத நூல்கள் மற்றும் அரிய வகை ஓவியங்கள், புகைப்படங்கள், சிலைகள்  போன்ற பொக்கிஷங்கள் அங்குள்ள பணியாளர்கள்  மற்றும் நிர்வாகத்திலுள்ள சிலரின் துணையுடன் திருடப்பட்டு வருகிறது. எனவே சிறப்பு அதிகாரியை நியமித்து திருடப்பட்ட அரிய பொக்கிஷங்களை மீட்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர். இது குறித்து விசாரனையை முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this:

Related posts

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI

+2 பொதுத்தேர்வு குறித்து முக்கிய முடிவு… முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை…!

NEWSKADAI

கொரோனாவில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு… அரசுக்கு அதிரடி கோரிக்கையுடன் வழக்கு

AMARA

திருநங்கைகளுக்கு கிடைக்குமா கொரோனா நிவாரணம்?… உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறிய பதில் இதோ…!

NEWSKADAI

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M

சேலம் இரும்பாலையில் இன்று முதல் ஆரம்பம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்…!

NEWSKADAI