தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஏராளமான மணல் கடத்தல் வழக்குகள் பதிவாகிறது. இந்த வழக்கில் சிக்குபவர்களுக்கு எளிதாக ஜாமீன் வழங்கப்படுகிறது. அவ்வாறு ஜாமீன் வழங்கப்படுபவர்களுக்கு அபரதமாக குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு நீதிமன்றங்கள் நிபந்தனைகளை விதிக்கின்றன.


இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களின் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 15 மனுக்கள் நேற்று முன்தினம் விசாரனைக்கு வந்தது. மணல் கடத்தல் வழக்குகளில் மிகவும் எளிதாக ஜாமீன் கிடைப்பதால் மணல் கடத்தல் விவகாரம் அதிகரித்து வருகிறது. இது நீடித்து கொண்டே போனால் தமிழகத்தில் கனிமவளம் எதிர்காலத்தில் இல்லாமல் போய் விடும்.

குடிதண்ணீருக்கு அடுத்த தலைமுறையினர் திண்டாட வேண்டியது வரும். ஆகையால் இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு ஜாமீன் கிடையாது. அவர்கள் சிறைக்குள் சில காலம் இருந்தால் தான் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பயம் வரும். இதனால் மணல் கடத்தலும் குறையும். இயற்கை வளங்களையும் பாதுகாக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதனால் இனி மணல் கடத்தல் வழக்குகள் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.