கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் செம்ம ஹிட்டடித்தது. இதில் காஜல் அகர்வாலுடன் ஜெயம் ரவியின் பள்ளி கால காதலியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் தமிழில் பப்பி, வாட்ச்மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, கன்னட திரையுலகிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார்.
லாக்டவுன் நேரத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் சமயத்தில் அரைகுறை உடையில் ஆட்டம் போட்டு அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவருடைய உடற்பயிற்சி நடனத்தை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. கொரோனா லாக்டவுன் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மேலும் படிக்க : http://போதைப்பொருள் விவகாரத்தில் பகீர் திருப்பம்… ஜெயம் ரவி பட நடிகை அதிரடி கைது…!!
இந்நிலையில் அங்குள்ள பூங்கா ஒன்றில் பயிற்சி மேற்கொள்வதற்காக சென்ற சம்யுக்தா ஹெக்டேவை ஒரு கும்பல் தாக்க முயன்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். HSR லேஅவுட் அகரா ஏரி அருகேயுள்ள பார்க்கில் தனது 2 தோழிகளுடன் ஸ்போர்ட்ஸ் பிரா, ஸ்போர்ட்ஸ் டிராக் அணிந்து கொண்டு வளையங்களை வைத்து பயிற்சி செய்ய முயன்றுள்ளார். அதை பார்த்த வயசான பெண்மணி ஒருவர் சகட்டு மேனிக்கு அவர்களை திட்ட ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி 2 தோழிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட ஆண்கள் கூட்டம் சம்யுக்தாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி பிரச்சனை செய்துள்ளனர்.
பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட சம்யுக்தா ஹெக்டே இன்ஸ்டாகிராம் நேரலை மூலமாக மக்களிடம் சூழ்நிலைய புரியவைக்க முயற்சி செய்தார். மேலும் தனது உடையை கழட்டி காண்பித்து இது ஆபாச உடையாம், இதை போட்டுக்கொண்டு நான் பயிற்சி செய்யக்கூடாது என்றும், உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அனைவரும் பிரச்சனை செய்வதாக கூறியுள்ளார். சம்யுக்தா மிகவும் பதற்றத்துடன் கிட்டதட்ட அழாத குறையாக பேசியுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram