Newskadai.com
தமிழ்நாடு

12 வயது சிறுமியை கொடூரமாக வன்கொடுமை செய்து கொலை… குற்றவாளி விடுதலைக்கு எதிராக கடையடைப்பு…!

Judgement
Share this:

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குரும்பட்டியில் முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம் இவரது மனைவி லட்சுமி, இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி அன்று வெங்கடாசலம் அவரது மனைவியோடு வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் அச்சிறுமி வீட்டில் தனியே இருந்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் மயக்கம் அடைந்த சிறுமியின் வாயிலும், மூக்கிலும் மின்சார வயரை வைத்து, மின்சாரம் செலுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளி நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 29 ம் தேதி வெளிவந்த நிலையில் கிருபானந்தன் குற்றாவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சர்வ சாதாரணமாக தப்புவது தொடர்கதையாகி வருகிறது.  இதையடுத்து குற்றவாளி கிருபானந்தனுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்று தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, போரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள சலூன் கடைகள் வரும் அக் 9 ம் தேதி கடையடைப்பு செய்யப்பட உள்ளன.


Share this:

Related posts

வாகன ஓட்டிகள் மீது வரியை அள்ளி வீசும் சுங்கச்சாவடிகள்… மறைமுக கட்டணத்தால் மன உளைச்சலில் மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

வேளாண் மசோதாவிற்கு எதிராக திரண்ட எதிர்க்கட்சிகள்… கிருஷ்ணகிரியில் போராட்டம்..!!

NEWSKADAI

தூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!!

THAVAMANI NATARAJAN

6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை… கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

AMARA

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

மீண்டும் ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

THAVAMANI NATARAJAN