Newskadai.com
தமிழ்நாடு

“அப்பா அப்பா வேணாம் பா”… திருநங்கையின் வளர்ப்பு மகனை துன்புறுத்திய கொடூரன்..!

Transgender Kannaki complains that she tried to kill her adopted son for her husband's property
Share this:

சேலத்தில் சொத்திற்காக தன் வளர்ப்பு மகனை துன்புறுத்தி கொலை செய்யவும் துனிந்த தந்தை கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் திருநங்கையான கண்ணகி வசித்து வருகிறார், திருநங்கை கண்ணகி சில ஆண்டுகளாக சேலம் லைன் மேடு பகுதியில் வசித்து வரும் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு கூத்தாண்டவர் கோவிலில் அப்துல் முபாரக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து ராகுல் என்ற 13 வயது சிறுவனை தத்தெடுத்து வளர்த்து  வந்தார்கள்.

Transgender Kannaki complains that she tried to kill her adopted son for her husband's property

கண்ணகியின் காதல் கணவர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் செல்போன் பழுது பார்க்கும் கடையினை நடத்தி வருகிறார், சந்தோசமாக சென்று கொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில் திடீரென புதிய பிரச்சனை ஒன்று துவங்கியது, அந்த பிரச்சனை கண்ணகிக்கு சொந்தமான 30 லட்சம் மதிப்புள்ள வீடு தான், கடந்த சில மாதங்களாக கண்ணகியின் கணவர் அப்துல் முபாரக் கண்ணகி பெயரில் உள்ள வீட்டினை தன் பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கண்ணகி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் வளர்ப்பு மகனால் வீடு பறிபோய்விடுமோ என்ன எண்ணத்தில் தினமும் வளர்ப்பு மகனான ராகுலை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

Transgender Kannaki complains that she tried to kill her adopted son for her husband's property

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக வீட்டினை தன் பெயருக்கு எழுதி தராவிட்டால் ராகுலை கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். கணவரின் நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணகி தன் மகன் ராகுலை அடித்து துன்புறுத்திய வீடியோ காட்சிகளை கணவருக்கு தெரியாமல் தனது செல்போனில் பதிவு செய்து சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநங்கை கண்ணகியின் புகாரை தொடர்ந்து அப்துல் முபாரக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் இது குறித்த விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க http://லாரியில் மோதிய ஷேர் ஆட்டோ… துண்டான விரல்களைத் தேடி சாலையில் துடிதுடித்த பயணிகள்…!


Share this:

Related posts

‘கொரோனா’ கைதி தப்பியோட்டம்… சேலம் அரசு மருத்துவமனையில் பதற்றம்…!!

THAVAMANI NATARAJAN

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

MANIMARAN M

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

MANIMARAN M

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

ரத்து செய்யப்பட்டது ஏலம் : செத்து மிதந்தது மீன்கள் – நாகூரில் பரபரப்பு…

MANIMARAN M