Newskadai.com
தமிழ்நாடு

சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி… வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்…!!

BUS
Share this:

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக சிறு சிறு தளர்வுகளை அரசு  வழங்கி வருகின்றது. இதை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகத்திற்கு அரசு அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து  தமிழகம் முழுவதும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது.

BUS

இதையடுத்து நேற்று சேலத்தில் இருந்து சென்னை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், கடலூர், திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு வெளி மாவட்டகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மக்களிடையே கொரோனா அச்சம் தொடர்வதால் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வந்து சென்றதை காண முடிந்தது.

சேலம் பஸ் நிலையத்திலிருந்து  வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 300 பேருந்துகளில் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே நேற்று இரவு வரை இயக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிகையாக பஸ் டிரைவர், கண்டக்டருக்கு சானிடைசர், கையுறை, முக கவசம் ஆகியவை போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டள்ளது, அதுசமயம்  பயணிகள் முக கவசம் அணிந்திருந்தாள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சேலம் கிளை அலுவலகத்திலிருந்து சென்னை, திருப்பதி, திருச்செந்தூர்,  ராமேசுவரம், குருவாயூர், எர்ணாகுளம், கொச்சி, கோழிக்கோடு கன்னியாகுமரி, செங்கோட்டை, திருவனந்தபுரம், ஆகிய ஊர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது, ஆனால் தற்பொழுது 18 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது, சென்னைக்கு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டது, பயணிகளின் வருகையை பொறுத்து பேருந்துகள் அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் இருந்து கர்நாடக மாநிலங்களான பெங்களூரு, மைசூரு, மாதேஸ்வரன் மலை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 52 பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றால் கடந்த 5 மாதங்களாக இயக்கபடாமல் இருந்த பேருந்துகள், நேற்று இயக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.


Share this:

Related posts

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

THAVAMANI NATARAJAN

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

NEWSKADAI

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… எவற்றுக்கெல்லாம் தடை தொடருகிறது தெரியுமா??

AMARA

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M