Newskadai.com
தமிழ்நாடு

சேலம் மக்களே உஷார்: இந்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு போகாதீங்க…!!

Priyam Hospital Salem
Share this:

கொரேனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருந்துவமனைகளை அதிக அளவில் நாடுகிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது தனியார் மருத்துவமனைகள், அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அரசு அறிவித்த கட்டணத்தை விட அதிக அளவில் வசூலிக்கின்றனர். அதோடு மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களையும் கொரோனா தொற்று இருப்பதாக கூறி சிகிக்சை அளித்து பல லட்சங்களை சுரண்டுகின்றனர். இது போன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Corona

சேலம் கொண்டாலாம்பட்டி பெங்களூர் பைபாஸ் சாலையில் 15 மருத்துவர்கள் கூட்டு சேர்ந்து பிரியம் ஸ்பெஷாலிட்டி மருத்துவனை என்ற தனியார் மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர். இங்கு கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை என ஒரு லாட்ஜையே வாடகைக்கு பிடித்து லட்சக்கணக்கில் வசூலித்துள்ளனர். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளிகள் அதிகமாக உயிரிழப்பதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், சுகாதாரதுறை இயக்குனர் மலர்விழி தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

Corona

விசாரணையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முறையான மருத்துவர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவரான நவீன் எம்.பி.பி.எஸ் முடித்திருந்தாலும், ஒரு வருடம் பயிற்சி முடிக்க இன்னும் ஒருமாதம் உள்ளதும், மருத்துவ கவுன்சிலில் பதிவு பெறாததும் தெரியவந்துள்ளது.  மேலும் அவர் இறப்பு சான்றிதழில் கையெப்பமிட்டது மருத்துவ விதிகளை மீறிய செயல் என்பதையும் கண்டறியப்பட்டுள்ளது.  மருத்துவ சட்டத்துக்கு விரோதமானது என்பதால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

10வது படித்திருந்தாலே அரசு வேலை… ‘நாளை’ கடைசி நாள்… சீக்கிரம் முந்துங்கள்…!

NEWSKADAI

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

MANIMARAN M

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN

மத மாற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… தொடக்க பள்ளியில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN