Newskadai.com
தமிழ்நாடு

தூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!!

Share this:

2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உயிரிழப்புகளை மட்டுமே நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் முதல் இடம் பிடிப்பது கொரோனா தொற்று பரவலால் ஏற்படும் உயிரிழப்புகளாக இருப்பினும் அதற்கு அடுத்த வரிசையில் கொலை, தற்கொலை, விபத்து போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அதிலும் நேற்று இரவு சேலத்தில் நடந்த தீவிபத்து சம்பவம் அனைவரின் மனதையும் நெருட வைத்துள்ளது.

சேலம் குரங்குச்சாவடி அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரில் வசித்து வருபவர் அன்பழகன், இவர் சொந்தமாக மர அரவை மில் நடத்தி வருகிறார். அன்பழகன், மனைவி புஷ்பா, பெற்றோர்கள், மற்றும் அவரது தம்பி கார்த்தியின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று இரவு அன்பழகன், அவருடைய மனைவி புஷ்பா, அவரது தம்பி கார்த்தி, அவருடைய மனைவி மகேஷ்வரி, இவர்களின் குழந்தைகள் சர்வேஷ், முகேஷ் ஆகியோர் அந்த வீட்டில் உள்ள அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீப்பற்றி பரவியது.

வீட்டின் கீழ் அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களில் அன்பழகன் தீ பரவியதை பார்த்து உடனே தீயை அணைக்க தன்னால் முடிந்தவரை முயன்றுள்ளார். ஆனால் வீட்டில் தூங்கியவர்களில் 5 பேரும் நல்ல தூக்கத்தில் இருந்ததால் தீ பற்றியது அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் அவர்களின் மீதும் தீ பரவியிருக்கிறது, அவர்கள் தீயில் கருகி அலறிய சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், அன்பழகனும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் மற்றும் சூரமங்கலம் காவல்  உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடுமையாக போராடி தீயை அணைந்தனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்துவதற்குள் அன்பழகன் மனைவி புஷ்பா (40), தம்பி கார்த்தி, தம்பி மனைவி மகேஸ்வரி (35), கார்த்தியின் குழந்தைகளான சர்வேஷ் (12), முகேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அன்பழகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Share this:

Related posts

தமிழக வேலை தமிழர்களுக்கே! களத்தில் இறங்கிய வேல்முருகன் ஆர்மி…

MANIMARAN M

மீண்டும் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

AFRIN

‘நீ கிறுக்குத்தனமா கேள்வி கேட்டால்’… லஞ்சம் குறித்த கேள்வியால் கடுப்பான வேளாண் துறை அமைச்சர்…!

AMARA

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு… மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்…!!

THAVAMANI NATARAJAN

சென்னையை அடுத்து கடலூரில் நடந்தேறிய பயங்கரம்…. குட்கா கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் பறிமுதல்…!!

THAVAMANI NATARAJAN

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI