Newskadai.com
தமிழ்நாடு

முதல்வர் தொகுதியில் தலைவிரித்தாடும் கொரோனா… கிடா விருந்தில் பங்கேற்ற 150 பேருக்கு தொற்று??

Corona virus
Share this:

சேலம் மாவட்டத்தில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் பஸ்டேண்ட் கடைவீதி, சுப்ரமணியசுவாமி கோவில் பகுதியில் கொரோனா தொற்று பரவியதாக தகவல் வெளியானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 ஜலகண்டாபுரத்தில் வசிக்கும் ஒருவர் கடந்த புதன் கிழமை அன்று கிடா விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.  இவ்விழாவில் கலந்து கொண்ட அந்த குடும்பத்தை சேர்ந்த 5 வது வார்டு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு  உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்ப்பட்டுள்ளது.  இந்த நிலையில் அவரது தந்தை (70 வயது) திடீரென உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவரது எதிர் வீட்டில் வசிக்கும் 20 வயது உடைய மாற்றுத்திருனாளி பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த வயதான மூதாட்டியும் நேற்று முன் தினம் காலை இறந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கொரோனா தொற்றால் பாதித்திருக்கலாம் என அச்சத்தில் உள்ளனர்.
இந்த செய்தி பரவியதை தொடர்ந்து கிடா விருந்தில் பங்கேற்றவர்கள், மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என 152 பேருக்கு கொரோன தொற்று உள்ளதா என பரிசோதனை நடத்தினர் , இதனால்  அந்த பகுதியில்  செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் இருந்து மக்கள் தனித்திருக்கும் படி சுகாதாரத்துறையின் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மக்களின் ஒத்துழைப்பின்மையால் தொற்று அதிகரித்து வருவதற்கு இந்த கிடா விருந்து சம்பவம் ஒரு சாட்சியாக மாறியுள்ளது.

Share this:

Related posts

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA

இ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…!!

POONKUZHALI

தமிழக சாலைகளில் திடீர் மாற்றம்… விபத்துக்களை குறைக்க புதிய யுக்தி…!!

THAVAMANI NATARAJAN

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

சல்யூட் : தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த உயரிய கெளரவம்…!!

MANIMARAN M