Newskadai.com
தமிழ்நாடு

ஜலகையில் செஞ்சூரி அடித்த கொரோனா… தீயாய் பரவும் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி?

Share this:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள ஜலகண்டாபுரத்தில் கொரோனாவின் கோர தாண்டவம் தீவிரமடைந்து வருகிறது. ஜலகண்டாபுரத்தில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்ததை அடுத்து சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வில் இறங்கினர். 152 பேருக்கு தொற்று இருக்கலாம் எனக்கூறப்பட்ட நிலையில், முதற்கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் முதல் நாளில் 46 பேருக்கும், அடுத்த நாள் 20 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க: http://தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

இதையடுத்து ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு கடந்த 21ம் தேதி முதல் இன்று வரை ஒருவாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாத கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பின்னர் மெல்ல கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டனர்.

corona

மேலும் படிக்க: http://மேட்டூரில் ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி… திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல்…!!

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மற்றும் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைசியாக 90க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாக இருப்பதாக தகவல் வெளியானது. இன்றைய நிலவரப்படி 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஜலகண்டாபுரத்தில் மொத்தம் 100 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் திடீரென உயிரிழந்துள்ளார், அவருக்கும் கொரோனா தொற்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Share this:

Related posts

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M

தனி மாவட்டமாகுமா கும்பகோணம்??… முதல்வரின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் மக்கள்…!!

MANIMARAN M

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI