Newskadai.com
தமிழ்நாடு

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

Share this:

அரசின் தடுப்பு நடவடிக்கைகளையும் தாண்டி சேலத்தில் கொரோனா தொற்றின் வேகம் தீயாய் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 297 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டம் முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 14,774 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் நகர்புறத்தை தாண்டி தற்போது கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்றின் எண்ணிக்கையை போலவே நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 3 பேர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சேலம் தொப்பூரைச் சேர்ந்த 65 வயது ஆண், ஏத்தாப்பூரைச் சேர்ந்த 62 வயது ஆண், மேட்டூரைச் சேர்ந்த 70 வயது ஆண் என மூன்று முதியவர்கள் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், மேட்டூர் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Share this:

Related posts

கொரோனா தொற்று இல்லை… நலமுடன் இருக்கிறார் நல்லகண்ணு…

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

ஐ.டி.ரெய்டு: உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல்?

AMARA

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M

முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… கருணாஸ் மீது பரபரப்பு புகார்…!!

THAVAMANI NATARAJAN

நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

AMARA