Newskadai.com
தமிழ்நாடு

சேலம் கடைக்காரர்களே உஷார்: முன்னெச்சரிக்கை இல்லை என்றால் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கும் மாநகராட்சி…!

Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்ந்து அமல்படுத்துப்பட்டு வருகிறது. ஆனாலும் பல தளர்வுகளுடனும், சில கட்டுபாடுகளுடனும் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் அனைத்து வகை தொழில்துறைகளும் இயங்குவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

வரும்ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிவடைய இருக்கும் ஊரடங்கிற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு சேலம் மாநகாராட்சி ஆணையர் ஆர்.சதீஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது, தமிழக அரசு மக்கள் நலன் கருதி பல தளர்வுகளுடன் அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க அனுமதியளித்தது. அதனால் அனைவரும் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

  • கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • கடைகளில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் கையுறை அணிய வேண்டும்.
  • வளாக பகுதிகளில் மணிக்கொரு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும், அது குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும்.
  • கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பணியாளர்கள் யாருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற உபாதகைகள் இருந்தால் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • பரிசோதனை செய்த பிறகே அவர்களை கடைகளில் அனுமதிக்க வேண்டும்.

மேற்கூறிய விதிமுறைகளை அனைத்து கடைகாரர்களும், வணிக நிறுவனங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்புக் குழு ஆய்வு செய்யும் பொழுது, விதிமுறைகள் கடைபிடிக்கபடாமல் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


Share this:

Related posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

THAVAMANI NATARAJAN

பிரதமர் திட்டத்திலேயே கை வைப்பீங்களா?… கொதித்தெழுந்த எல்.முருகன்… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

MANIMARAN M

கோயம்பேடு மார்க்கெட் திறந்தாச்சு. வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

NEWSKADAI

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA