மத்திய அரசு பெட்ரோல் டீசல் சமையல் கியாஸ் விலை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது இந்நிலையில் பெட்ரோல் லிட்டருக்கு 90 ரூபாய் மேல் அதிகரித்து உள்ளது இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் சார்பில் பட்டை நாமம் இட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சில ஆட்டோ ஓட்டுனர்கள் தலையில் மண்ணை வாரி இறைத்து ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாநில அமைப்பாளர் கேடி ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.