பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் சாய் பல்லவி, இவரின். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் மாரி 2, தியா, என்ஜிகே என முன்னனி நடிகர்களுடன் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
சாய் பல்லவி நடிக்க வருவதற்கு முன்பாக மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார், 2016 ஆம் ஆண்டு தன் படிப்பை முடித்தவர் ஆனால் இதுவரை பயிற்சி மருத்துவராக தன்னைப் பதிவு செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விரத பர்வம் போன்ற படங்களில் பிசியாக இருக்கும் சாய்பல்லவி, திருச்சியில் உள்ள MAM கல்லூரியில் மருத்துவம் சார்ந்த தேர்வை எழுதுவதற்காக வந்திருந்தார்.
Latest pics of @Sai_Pallavi92 ❤️
Yesterday she attended MAM clg Alumini Event at Trichy ✨ #Saipallavi #Lovestory #Virataparvam pic.twitter.com/9cWoJQniIf— Sai Pallavi ™ (@SaiPallavi__DHF) September 1, 2020
கல்லூரிக்கு தேர்வெழுத வந்த சாய் பல்லவி முகக்கவசம் மற்றும் துப்பட்டாவால் தன் தலையில் சுற்றி யாரும் பார்த்துவிடகூடாது என வந்தார், எதிர்பாரத விதமாக தேர்வெழுத வந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அதை பகிர்ந்து வருகிறார்கள்.