Newskadai.com
உலகம்

குட் நியூஸ்: கொரோனாவை எதிர்க்க ஆயுதம் கிடைச்சாச்சு… அசுர வேகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்…!!

Share this:

கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றால் உலகமே போராடி வரும் நிலையில். தொற்றுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகளுக்கிடையே கடும் போட்டிகள் நடந்துவருகிறது. அந்த வரிசையில் ரஷ்யா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், மற்றும் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நான்காவது  இடத்தை இருக்கிறது ரஷ்யா
  இந்த நிலையில் ரஷ்யா கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து  அனைத்து நாடுகளுக்கும் முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையில் அமைச்சர்கள் கூட்டத்தில் உலகிலேயே முதன் முறையாக கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Russia
மேலும் அவர் கூறுகையில் எனது மகள்களில் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் தன்னையே ஈடுபடுத்தி கொண்டதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். தடுப்பு மருந்து கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தியை கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார். இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தாங்கள் உருவாக்கி வரும் தடுப்பூசியை பெருமளவு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் பல லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தயாரித்த இந்த தடுப்பூசி எதிர்பார்க்கும் வகையில் கொரோனாவுக்கு எதிராக செயல்பட்டால் மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

Related posts

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

செவ்வாய் கிரக ஆய்விற்கு புதிய ரோபோ… நாசா விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனை…!

NEWSKADAI

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

NEWSKADAI

60% வாக்குகளுடன் அமோக வெற்றி… இலங்கை தேர்தலில் ஜெயித்த ராஜபக்சே…!!

MANIMARAN M

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

MANIMARAN M