Newskadai.com
தமிழ்நாடு

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

Share this:

கொரோனா பெருந்தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் இயங்க அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயங்கி வருகிறது. வரும் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு வெளியே பேருந்துகளை இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லையில் பேருந்து ஒன்றில் 1 ரூபாய் டிக்கெட் கட்டணத்தைவிட அதிகமாக வசூல் செய்ததால் அந்த பேருந்துக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் நெல்லையிலிருந்து தூத்துக்குடி சென்று உள்ளார். அப்போது அவரிடம் 25 ரூபாய் பேருந்து கட்டணமாக நடத்துனர் வசூலித்துள்ளார். இசக்கிமுத்து அந்த ஒரு ரூபாயை கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் கொடுக்கவில்லை. இதனால் இசக்கிமுத்து நிர்ணயிக்கப்பட்ட 24 ரூபாய் கட்டணத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலித்ததாகவும், அதனைக் கேட்டு கொடுக்காமல் முறையற்ற வணிகம் செய்ததாகவும் கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பண இழப்பீடு ஆகியவற்றிற்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவு 5 ஆயிரம், மற்றும் கூடுதலாக வசூல் செய்த தொகை 1 ரூபாயையும் சேர்த்து ரூபாய் 20,001 தனியார் பேருந்து உரிமையாளர் வழங்க வேண்டும். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்கத் தவறும் பட்சத்தில் 6% வட்டியுடன் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


Share this:

Related posts

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

NEWSKADAI

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

MANIMARAN M

அடாவடி கடன் வசூல்: தனியார் வங்கியின் செயலால் தொழிலாளி பேங்க் வாசலிலேயே தீக்குளிப்பு…!!

MANIMARAN M

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

NEWSKADAI

6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை… கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

AMARA