Newskadai.com
சினிமா

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

SPB
Share this:

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது முதல் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் சென் டரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி முதலே எஸ்.பி.பி.யின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மா கருவிகளுடன் ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென கடந்த 20ம் தேதி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு பிரார்த்தனையில் திரையுலகினர், பொதுமக்கள், இசையுலகினர் என உலகம் முழுவது லட்சக்கணக்கானோர் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

SPB

அதன் பலனாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து ஐசியுவில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு பல்துறை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா மற்றும் லண்டனில் உள்ள சர்வதேச வல்லுநர்களிடமும் சிகிச்சை பற்றி ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டது. அதன் மூலம் எக்மோ மூலம் நாங்கள் அளித்து வரும் சிகிச்சை சரியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. அதில், உங்களுடைய தொடர் ஆதரவிற்கும், கூட்டு பிரார்த்தனைக்கும் நன்றி. அப்பாவின் உடல் நிலை நலமாக இருக்கிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மொத்த திரையுலகமும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அந்த அறிக்கை முற்றிலும் வதந்தி என எஸ்.பி.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்பாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு தினமும் நான் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் அப்பாவிற்கு தற்போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று மாலை மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு அப்பாவின் உடல் நிலை குறித்து நானே தகவலை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

NEWSKADAI

“நாட்டின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்”… உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்பதாக சூர்யா உறுதி…!

MANIMARAN M

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி… வைரல் வீடியோ…!!

AMARA

காதல் டூ கண்மணி…. சின்னத்திரை மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க போகும் பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக புகார்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

THAVAMANI NATARAJAN