Newskadai.com
தமிழ்நாடு

ரூ.250 கோடி ப்பே…. இந்த தண்ணி தொட்டிக்கு செலவு 250 கோடி… வாய் பிளக்கும் மக்கள்…!

tiurppur water tank
Share this:

திருப்பூர் மாவட்டம் கூத்தம்பாளையத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.250 கோடி மதீப்பீடு என்று குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 50-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் 1-வது வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா? என்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதை திறந்து வைத்த எம்.எல்.ஏ வீடியோ மூலம் அது குறித்தான விவரங்களைக் கூறி விளக்கமளித்தார்.

மேலும் படிக்க : http://சேலத்துக்கு வந்தாச்சு அதி நவீன கண்காணிப்பு கேமரா… இனி ஹெல்மெட் போடாம ‘எஸ்’ ஆக முடியாது…!

இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூத்தம்பாளையத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ. 250 கோடி என்று தொட்டியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான விமர்சனங்கள் வந்ததையடுத்து திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.

tiurppur water tank

இதையும் படிக்கலாம் : http://பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சமா?… அதிர்ச்சியான மக்கள்… வீடியோ விட்டு சரண்டரான எம்.எல்.ஏ….!

வரும் 2050 ஆண்டில் திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை என எதிர்ப்பார்க்கப்படுவதால் அவர்களின் குடிநீர் தேவையை ஈடு செய்ய 4-வது குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

tiurppur water tank

மேட்டுப்பாளையம், பவானி ஆற்றிலிருந்து குழாய் பதித்து, அன்னூர் அருகே, சுத்திகரிப்பு செய்து, ராட்சத குழாய் மூலம், திருப்பூர் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தில் மாநகராட்சி பகுதியில், 27 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, பகுதி வாரியாக குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொட்டியில், 4ம் குடிநீர் திட்டத்தின் மொத்த மதிப்பு தொகைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்று திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளனர்.


Share this:

Related posts

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

பில்லி, சூனியம் எடுப்பதாக பூஜை… 105 சவரன் நகையுடன் தப்பிய ‘சூனியக்காரி’ கைது…!

THAVAMANI NATARAJAN

‘கொரோனா’ கைதி தப்பியோட்டம்… சேலம் அரசு மருத்துவமனையில் பதற்றம்…!!

THAVAMANI NATARAJAN

சினிமாவையே மிஞ்சும் திகில் சம்பவம்… கோவையில் திருநங்கை கொலையில் நடந்த கொடுமை…!

THAVAMANI NATARAJAN

10க்கும் கீழே குறைந்த சென்னை கொரோனா பலி… சகஜநிலையை நோக்கி தமிழகம்..!!

NEWSKADAI