Newskadai.com
அரசியல்

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.3 ஆயிரம் கோடி உடனடியாக தேவை… பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்…!

Palanisamy
Share this:

இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பல்வேறு மாநிலங்கள் கடும் சேதங்களை சந்தித்து வருகின்றன. இதனால் பிரதமர் மோடி நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவின் தீவிரம், தடுப்பு நடவடிக்கைகள், குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் விவரங்க குறித்து முதலமைசர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு தெரிவித்தார்.

பொது போக்குவரத்து மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்தும் பிரதமரிடம் முதலமைச்சர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3 ஆயிரம் கோடி உடனடியாக தேவை என பிரதமரிடம் எடப்பாடியார் வலியுறுத்தியுள்ளார். நவம்பர் மாதம் வரை ரேஷனில் வழங்க வேண்டிய 55, 367 மெட்ரிக் டன் துவரம் பருப்பை வழங்க கோரியும் பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று குறித்து பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதலமைச்சருடன் ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, குஜராத், பீகார், உ.பி., தெலங்கானா உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

தமிழக அரசே! பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி..

MANIMARAN M

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

MANIMARAN M

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI