Newskadai.com
தமிழ்நாடு

பாஜகவில் சேர வந்த ரவுடி… போலீசுக்கு பயந்து தப்பியோட்டம்…

Share this:

பாஜக மாநில தலைவராக எல்.முருகன் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி வியூகங்களை அமைத்து தமிழக பாஜகவை வலுப்பெற செய்ய முயற்சிகள் செய்து வருகிறார். இதனடிப்படையில் அனைத்து கட்சிகளில் இருந்தும் உள்ளூரில் செல்வாக்கு மிக்க நபர்களை பாஜகவுக்கு இழுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் முருகன்.

நடிகர் ராதாரவி, சினிமா தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் என சினிமா பிரபலங்கள் தொடங்கி, வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்ற அரசியல் பிரபலங்கள் வரையிலும், போலிஸ் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை முதல் வடசென்னை கல்வெட்டு ரவி, மண்ணிவாக்கம் ஜேஷ்வா, படப்பை குணா, திருச்சி ராஜா, அடைக்கலராஜ் போன்ற தாதாக்கள் வரை பாஜகவில் புது முகங்களாக இணைத்து வருகிறார்.

கட்சியில் இணையும் தொழில் அதிபர்களுக்கும், வழக்குகளில் சிக்கியிருப்போருக்கும் கட்சி மூலம் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் சினிமா பிரபலங்களால் கட்சிக்கு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது என இரட்டை பரஸ்பர நிலையை பாஜகவில் காணமுடிகிறது. பாஜக தலைவர் எல்.முருகனின் இந்த அதிரடி ஆட்டத்தால் தமிழக பாஜகவின் புது முகங்கள் கூடிக் கொண்டு செல்கிறது.

இருப்பினும் குற்ற வழுக்குகளில் தொடர்புடைய பலரையும் கட்சியில் இணைத்தது மற்றும் அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். புதிய வரவுகள் மூலம் கட்சிக்கு ஆதாயம் கிடைக்கும் எனப் பார்த்தால் இது போன்ற நபர்கள் கட்சியால் தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்வதாக பாஜகவில் சலசலப்புகள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க: http://அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

இந்நிலையில் வண்டலூர் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த எல்.முருகனை சந்தித்து பாஜகவில் இணைய வந்திருந்தார் பிரபல ரவுடி நெற்குன்றம் சூர்யா. இவர் பல கொலை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். கட்சியில் சேர வந்த ரவுடி சூர்யா அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கண்டு பயந்து ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுப்போன்ற குற்ற வழக்கு தொடர்புடையவர்கள் பலரும் பாஜகவை தேர்ந்தெடுத்து இணைந்து வருவது ஏன் என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் – ஆசிரியர்கள் மீது குவியும் பாலியல் புகார்கள்

MANIMARAN M

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

THAVAMANI NATARAJAN

JEE தேர்வு எழுத முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறும் மாணவர்கள்… மாவட்டம் டூ மாவட்டம் செல்ல பேருந்து இயக்கம் இல்லாததால் அவலம்…!

POONKUZHALI

மதுரையில இதெல்லாம் சாதாரணம்ப்பு… இது மூணாவதப்பு…

THAVAMANI NATARAJAN

#coronavirus தினந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கும் இறப்பு எண்ணிக்கை- இன்றைய கொரோனா நிலை..!!

NEWSKADAI