Newskadai.com
தமிழ்நாடு

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

Share this:

ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர் பிரபல ரவுடி துரை முத்து. இவர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் சரகத்தில் பல கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர். சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை காட்டுப் பகுதியில் துரை முத்து பதுங்கியிருப்பதாக் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வல்லநாடு மணக்கரை பகுதியில் ரவுடி துரை முத்து பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடிய ரவுடி துரை முத்துவும், அவனது கூட்டாளிகளும் காவல்துறையினரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசிய வண்ணம் சென்றனர். காவல்துறையினரும் விடாமல் துரத்தி சென்றனர். இதில் ரவுடிகள் வீசிய நாட்டு வெடிகுண்டுக்கு சுப்பிரமணியன் என்ற காவலர் பலியானார். தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ரவுடி துரை முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவனது கூட்டாளிகள் தப்பித்துச் சென்று விட்டதாகவும் தூத்துக்குடி எஸ்.பி.விஜயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காவலர் சுப்பிரமணியன், ரவுடி துரை முத்து இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டு வெடிகுண்டுக்கு பலியான காவலர் சுப்ரமணியன் பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். 2017இல் தான் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். காவலர் இறந்த செய்தி கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Share this:

Related posts

தென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக ஆய்வுக்கு புறப்பட தயாராகும் எடப்பாடியார்…!!

MANIMARAN M

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

நவம்பரில் பள்ளிகள் திறப்பா?…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்…!!

THAVAMANI NATARAJAN

நீதிபதிக்கே இந்த நிலைமையா..?? கொதித்தெழுந்த மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

ராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார் சென்னைக்கு மாற்றம்…

MANIMARAN M