Newskadai.com
தமிழ்நாடு

பிரபல ரவுடி என்கவுண்டர்… பரபரப்பில் சென்னை…

Share this:

பல கொலை, கொள்ளை குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ரவுடி சங்கர். அயனாவரம் வியாபாரியை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த வழக்கு உள்ளிட்ட மேலும் நான்கு கொலை வழக்குகளிலும் தொடர்புடையவன். தலைமறைவாக இருந்த ரவுடி சங்கர் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலறிந்து இன்று அதிகாலை அவ்விடத்திற்கு அயனாவரம் காவல் துறையினர் விரைந்து சென்றனர். அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சென்ற காவலர்கள் ரவுடியை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது காவல் துறையினரை அரிவாளால் கடுமையாக வெட்டி விட்டு தப்பித்து செல்ல முயன்றான் ரவுடி சங்கர்.

இதில் முபாரக் என்ற காவலருக்கு கடுமையான அரிவாள் வெட்டு விழுந்தது. தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் நடராஜன் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டார். அதே இடத்தில் சங்கர் சுருண்டு விழுந்து பலியானான். வெட்டுக் காயமடைந்த காவலர் முபாரக் கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பலியான ரவுடி சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடியில் ரவுடி துரை முத்து எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை அயனாவரத்தில் சங்கர் என்ற ரவுடியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.


Share this:

Related posts

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

அக்டோபர் 1-ல் பள்ளிகள் திறப்பு இல்லை : முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

MANIMARAN M

மாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…

MANIMARAN M

கிருஷ்ணகிரி அரசியல் பிரமுகர்களை தொடர்ந்து தாக்கும் கொரோனா

THAVAMANI NATARAJAN

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M