பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தினர் கடந்த 19ம் தேதி இரவு தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் திருட வந்த முகமூடி கொள்ளையர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக்குமார் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL போட்டிகள் துவங்கவுள்ளன. ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென இத் தொடரில் இருந்து விலகி இந்தியா திரும்பியதற்கு இதுதான் காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.