Newskadai.com
தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… நேற்று ஒரே நாளில் 5 பேர் பலி..!!!

brucella
Share this:

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய்த் தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மட்டும் 378 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 177 பேர், எடப்பாடி ஒன்றிய பகுதியில் 4 பேர் காடையம்பட்டியில் 6 பேர், மகுடஞ்சாவடியில் 4 பேர், கொங்கணாபுரத்தில் 3 பேர், மேட்டூரில் ஒருவர், நங்கவள்ளியில் 4 பேர், ஓமலூரில் 28 பேர், சேலம் ஒன்றியம் பகுதியில் 13 பேர், சங்ககிரியில் 22 பேர், தாரமங்கலத்தில் 9 பேர், வீரபாண்டியில் 15 பேர், ஆத்தூர் ஒன்றியத்தில் 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 4 பேர், கெங்கவல்லியில் 12 பேர், பனமரத்துப்பட்டியில் 14 பேர்,

பெத்தநாயக்கன்பாளையத்தில் 9 பேர், தலைவாசலில் 2 பேர், வாழப்பாடியில் 11 பேர், ஏற்காட்டில் ஒருவர், எடப்பாடி நகராட்சியில் 12 பேர், மேட்டூர் நகராட்சியில் ஒருவர், நரசிங்கபுரம் நகராட்சியில் ஒருவர், ஆத்தூர் நகராட்சியில் 12 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 18,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 249 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இருப்பினும் நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.


Share this:

Related posts

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA

முனீஸ்வரருக்கு தானமாக இடமளித்த அப்துல் காதர்…..

MANIMARAN M

அக்.31 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… தடைகளும் தளர்வுகளும்…!!!

MANIMARAN M

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

+1,+2 மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட்… அரசின் அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN

தமிழக சாலைகளில் திடீர் மாற்றம்… விபத்துக்களை குறைக்க புதிய யுக்தி…!!

THAVAMANI NATARAJAN