கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கருப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ள நோட்டுளை புழக்கத்திலுருந்து தடுப்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த நடவடிக்கையால், ஒட்டு நாடும் இரவும் பகல் பாராமல் ஏ.டி.எம். வாசலில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதை தொடர்ந்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மக்கள் பணப்பற்றாக்குறையில் இருந்த போது உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டது.
2016-17 ம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கையில் 350 கோடி அச்சடிக்கப்பட்டது, அதன்பின் படிப்படியாக 2000ரூபாய் நோட்டுகளின் பண புழக்கம் குறைந்து வந்தது, இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 சதவீத்தில் இருந்து 22 சதவீதமாக குறைந்தது.
2019-20 ம் நிதியாண்டில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கையில் 2200 கோடி இதில் 500 ரூபாய் நோட்டுகளே 50 சதிவீதத்திற்கு மேலாக அச்சடிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த மார்ச் மாதம் 2000 ரூபாய் அச்சடிப்பதை நிறுத்தப்படாது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் 2019-2020ம் நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டுகளை கூட அச்சடவில்லை என தெரிவித்துள்ளது.