Newskadai.com
தமிழ்நாடு

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

Share this:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை தலைவர் பழனிசாமி தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் விவசாய கூலித் தொழிலாளிகள் பலரும் அருகில் உள்ள மாவட்ட எல்லைகளில் இருந்து வருபவர்கள் ஆக இருக்கிறார்கள். ஈ-பாஸ் காரணமாக கூலி ஆட்கள் வருவதில் சிக்கல் உள்ளது. சரியான நேரத்தில காய்கறிகளை பறித்து விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் நஷ்டமே ஏற்படுகிறது. தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையிலான ஈ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க:http://தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

நீட்டிக்கப்படும் லாக் டவுனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா காட்டும் உயிர் பயம் ஒரு புறம் இருந்தாலும் உயிர்வாழ பொருளாதாரம் இன்றி சிரமப்படுகின்றனர். பெருமளவில் வேலைவாய்ப்புகள் குறைந்து உள்ளன. மக்களில் பெரும்பகுதியினர் வேலைவாய்ப்பிற்கு பக்கத்து மாவட்டங்கள், மாநிலங்களை சார்ந்தே இருக்கின்றனர். ஊரடங்கினால் வீடுகளில் முடங்கிக் கிடப்பவர்கள் வாழ்வாதாரத்தை தேடி செல்ல இந்த இ பாஸ் நடைமுறை மிகப்பெரிய தடையாக உள்ளது.

மேலும் படிக்க:http://நிரந்தர முதல்வரின் தொகுதியில் அவலம்: கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்..

தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “சொந்த ஊர்களுக்கு சென்ற பிற மாவட்ட மற்றும் பிற மாநிலத் தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும் சிறு குறு தொழிற்சாலைகள் தனியாக பஸ் ஏற்பாடு செய்து பிற மாநில, மாவட்ட தொழிலாளர்களை அழைத்து வர முடியவில்லை. சிறு குறு தொழில்கள் பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வர ஏதுவாக இந்த ஈ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த பட வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Share this:

Related posts

தமிழக சாலைகளில் திடீர் மாற்றம்… விபத்துக்களை குறைக்க புதிய யுக்தி…!!

THAVAMANI NATARAJAN

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

முனீஸ்வரருக்கு தானமாக இடமளித்த அப்துல் காதர்…..

MANIMARAN M

“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M