Newskadai.com
தமிழ்நாடு

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை… அரை மணி நேரத்திற்கு இவ்வளவு காசா?

helicopter
Share this:

சைக்கிள் வாடகைக்கு எடுத்த காலம் மாறி, கார், பஸ் என வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்த மக்களுக்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் நேரம் வந்து விட்டது. கோவையில் இரண்டு தனியார் நிருவனங்கள் இணைந்து புதிய சேவையை துவங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் என்.ஜி.ஓ காலனி கங்கா ஹெலிபேட் சர்வீஸ் மையத்தில் எக்ஸ்பிரஸ் ஹாலிடேஸ் பிளானட் எக்ஸ் என்ற நிருவனங்கள் இணைந்து புதிதாக ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையில் சுப நிகழ்ச்சிகளில் வானிலிருந்து மலர்களை தூவுவது, மருத்துவ அவசர நிலை பயணம், நகர சுற்றுபயணம், பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் ஓய்வு பயணங்கள் போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது, இப்பயணத்தில் விமானியுடன் 5 பயணிகள் பயணிக்க அனுமதிக்கிறது.

 helicopter

கோவை மாநகரை சுற்றி பார்க்க அரை மணி தேரத்திற்கு 20 ஆயிரம் வீதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இந்த சேவையால் தனி ஒருவர் கூட தன் சொந்த தேவைக்காக ஹெலிகாப்டரை வாடகைக்கு  எடுக்க முடியும், குறைந்த பட்சம் அரைமணி நேரம் முதல் அவர்களின் தேவைக்கேற்ப வாடகைக்கு எடுத்து உபயோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் சுற்றுலா பயணிகளுக்கு 2018-ல் ஹெலிகாப்டரில் 10 நிமிட பயணத்திற்கு 4,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

NEWSKADAI

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M

கள்ளக்காதலால் 3 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்… ஈவு இரக்கமற்ற தாயின் கொடூர செயல்…!!

POONKUZHALI

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

சேலத்தில் சத்துணவு பணியாளர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் உத்தரவுடன் விவரம் உள்ளே…!

THAVAMANI NATARAJAN

மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

MANIMARAN M