Newskadai.com
சினிமா

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்

Vetri Surya
Share this:

நடிகர் சூர்யா ரசிகர்கள் அவருடைய பிறந்த நாள் அன்று, சூர்யா நடித்து வெளிவர உள்ள “சூரரைப் போற்று” படத்தோட வீடியோ சாங்க ஆவலோடு எதிர்பார்த்து கிட்டு இருந்தப்ப, இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் யாரும் எதிர்பாராத விதமா “வாடிவாசல்” படத்தோட போஸ்டர ரிலீஸ் பண்ணி சூர்யா  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டார்.

Soorarai_Pottru

காத்திருந்த ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தா இருந்தது சூரரைப் போற்று படத்தோட “காட்டுப் பயல” வீடியோ சாங். பாட்டு சூப்பரா இருந்துச்சு. அசுரன் படத்தில் கிராமிய மணம் கமழும் பாடல்களை கொடுத்து நம்ம தாலாட்டுன ஜீவி, இந்த பாடல் மூலமாக முரட்டு கிராமத்து மண்வாசனை கொடுத்திருக்கிறார். பாட்டோட விஷுவல்ஸ், எப்படா இந்த படம் ரிலீஸ் ஆகப் போகுதுன்னு ஏங்க வைக்கிறது.

Vadivasal

ரசிகர்கள் “காட்டு பயல” கட்டிப்புடிச்சு கொஞ்சிகிட்டு இருந்தப்போ, வெற்றிமாறன் யாரும் எதிர்பாராத விதமா “வாடிவாசல்” திறந்து விட்டுட்டார். சூர்யா ரசிகர்கள் மட்டுமில்ல சினிமா ரசிகர்கள் எல்லோருமே திக்குமுக்காடிப் போய்ட்டாங்க. வெற்றிமாறன் இயக்கத்தில் மொத மொதல்ல சூர்யா நடிக்கப் போற படம் தான் “வாடிவாசல்”.

Asuran Poster

அசுரன்ல தமிழ் சினிமாவையே அசர அடிச்ச இயக்குனர் “வாடிவாசல்” படம் மூலம் இந்திய சினிமாவையே தெறிக்க விடுவார் என்ற எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இருக்கிறது. காரணம் ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து தான் படம் தயாராக உள்ளது. இது ஒன்று போதுமே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா களம் இறங்கும் வீர விளையாட்டை காண ஆவல் கூடாதா என்ன??


Share this:

Related posts

ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை… இரண்டு நடிகைகளுக்கிடையே மாட்டிக்கொண்ட பிரபல இயக்குநர்…!!

NEWSKADAI

“எஸ்.பி.பி. விழிப்புடன் நல்ல நிலையில் இருக்கிறார்”… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…!!

NEWSKADAI

“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

NEWSKADAI

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA

”சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல, கொலையே ” பாலிவுட்டை கதிகலங்க வைத்த சுப்பிரமணியசுவாமி

MANIMARAN M

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA