Newskadai.com
அரசியல்

#ReleasePerarivalan : ட்விட்டரில் தீவிரமடையும் பேரறிவாளன் விடுதலை போராட்டம்..!!

#ReleasePerarivalan
Share this:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவரது விடுதலைக்கு பேரறிவாளனின் தாய், முற்போக்கு இயக்கங்கள் மற்றும் தமிழக கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ராஜீவ் காந்தி குடும்பத்தினர் இவரது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உச்சநீதிமன்றமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

#ReleasePerarivalan

இவருக்கு விடுதலை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதையும் மாநில அரசு விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலிருந்த பொழுதே பேரறிவாளன் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆயினும் இன்றுவரை பேரறிவாளன் விடுதலையில் மத்திய மாநில அரசுகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

#ReleasePerarivalan

தமிழக கவர்னரின் கையெழுத்திற்காக கோப்புகள் காத்திருப்பதாக தற்போதைய கள நிலவரம் சொல்கிறது. பேரறிவாளனின் வயதான தாய் இன்றுவரை தனது மகனின் விடுதலைக்காக அயராது போராடிக் கொண்டிருக்கிறார். பேரறிவாளனின் தந்தை மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நேரத்திலாவது அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த Tweet bank-ல் 200 டுவீட்கள் உள்ளன. வெறும் linkஐ click செய்தால் போதும், உங்கள் டிவிட்டர் கணக்கில் tweet பதிவாகிவிடும். இன்று (20 நவம்பர்) முதல் இதை பயன்படுத்தி #ReleasePerarivalan டுவிட்டர் செய்யுங்கள்.

Share this:

Related posts

சூடுபிடிக்கும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை… அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

AMARA

அதிரடி அரசியல் என்ட்ரி… இன்று பாஜகவில் இணைகிறார் வனிதா?

AMARA

எக்மோ சிகிச்சையிலும் பின்னடைவு… தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு…!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!

AMARA

நாங்கன்னா மட்டும் உங்களுக்கு அவ்வளவு தொக்கா?… வேல் யாத்திரையால் சீறும் சீமான்…!

MANIMARAN M