தமிழகம் முழுவதும் மறுதேர்வு எழுதிய பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தங்களின் பள்ளியிலும், தேர்வெழுதிய மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வு எழுதிய பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மற்றும் விடைதாள் நகல் பெற நேற்று முதல் விண்ணப்பித்து வருகின்றனர். விடைத்தாள் நகல் பெற 275 ரூபாயும் , மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி தெரிவித்துள்ளார்.