Newskadai.com
அரசியல்

“திமுக நடவடிக்கையை எதிர்கொள்ள தயார்”… மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்ட எம்.எல்.ஏ., கு.க.செல்வம்…!!

Share this:

திமுக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் அதை முற்றிலும் மறுத்துள்ளார். இன்று காலை திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. அதாவது தனக்கு பதவி கிடைக்காத அதிருப்தியில் கு.க.செல்வம், பாஜகவில் இணைவதற்காக டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க:http://அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த கு.க.செல்வம் தனது தொகுதி பிரச்சனை குறித்து விளக்கியதாகவும், பாஜகவில் இணையவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். மேலும் திமுக தலைமைக்கு தெரிவிக்காமல் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தது குறித்து விளக்கமளித்துள்ள எம்.எல்.ஏ. கு.க.செல்வம், என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால் சந்திக்க தயார் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தொகுதியான ஆயிரம் விளக்கு பகுதியில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு மின் தூக்கிகளை இணைக்க வேண்டும் என்று கேட்பதற்காக பியூஷ் கோயலை சந்திக்க டெல்லி வந்தேன். முதல் முறை அனுமதி கொடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறை கொடுக்கவில்லை, அதைப்பற்றி கேட்கவே டெல்லி வந்தேன். அப்போது நட்டாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.


Share this:

Related posts

ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!

AMARA

இன்று கூடுகிறது அதிமுக உயர்மட்டக் குழு : எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசியல்…

MANIMARAN M

பாஜகவுடன் சகவாசம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கம்… ஸ்டாலின் அதிரடி…!!

AMARA

விவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி…

MANIMARAN M

“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!

AMARA

“தேனி மக்களின் கனவை நிறைவேற்றியே தீருவேன்”… மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி…!!

AMARA