ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2019-2020 ஆம் ஆண்டுக் கணக்குகள் விவாதிக்கபட்டு உபரியான 57 ஆயிரத்து 128 கோடி ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் உபரியாக உள்ள 57 ஆயிரத்து 128 கோடி ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளித்திருந்தது. இதற்கு பொருளாதார நிபுணர்களும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு 57 ஆயிரத்து 128 கோடி ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த செயல் பொருளாதார வல்லுநர்கள், வங்கியியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.