Newskadai.com
தமிழ்நாடு

“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…!

Share this:

கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகத்தில் மக்கள் வேலையின்றி உணவுக்கு அவதிபட்டு வந்தனர். இதனால் அவர்களின் பசியை போக்கும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் வாங்கும் அரிசியின் அளவை இருமடங்காக்கி மக்களுக்கு அளிக்க வேண்டும் என நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் தமிழக அரசின் உத்தரவுக்கு கீழ் படிந்து  மாதந்தோறும் அவர்களது பணிகளை சிறப்பாகவும் மக்களுக்கு சேவை புரியும் நோக்கத்திலும், ஏழை எளிய மக்களின் பசியை தீர்க்கும் வகையில் பணிபுரிந்தனர்.

கொரோனா தொற்று பரவலை கண்டுகொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் இது வரை கொரோன தொற்று பரவலால் 6 பணியாளர்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அதுபற்றி எந்தவிதமான கருத்தும் அரசிடமிருந்து வரவில்லை. இதனை தொடர்ந்து நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கைகைளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரணியன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் போராட்டம் குறித்து 5 முறை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்ட படி ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை. தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் 8 முறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கொரோனா தொற்றில் இறந்து போகும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரினோம். இதுவரை 6 பணியாளர்கள் இறந்துள்ளனர். இருவருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பணியாளர்களுக்கு வழங்க வில்லை. சனிக்கிழமை அன்று திருவாரூரில் முருகவேல் என்ற பணியாளர் கோரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

இதுபோன்ற இறப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இந்த நிலையை கணக்கில் வைத்துக்கொண்டு அணைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.  அதேபோன்று கொரோனா பாதித்த பணியாளர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். மாதந்தோறும் பணியாளர்களிடம் தொகை பிடித்தம் செய்து, மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து இறந்து போகும் பணியாளர்களுக்கு ரூ.25  லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை  தமிழக அரசு பரிசீலிக்கத் தயாராக இல்லை.

சட்டப் பேரவை திங்கள் கிழமை தொடங்கப்படும் வேளையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உத்தோசித்தோம். மறியல் செய்தால் அதன் மூலம் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால் திங்கள் கிழமை அதாவது இன்று ஒட்டுமொத்தமாக தமிழக முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் இயங்கும்  அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளோம் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.


Share this:

Related posts

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்… கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை வீடியோ…!!

AMARA

நாகை கடைக்காரர்களே உஷார்: வாடிக்கையாளர்கள் தவறு செஞ்சாலும் உங்களுக்குத் தான் அபராதம்… நகராட்சி அதிரடி உத்தரவு!!

MANIMARAN M

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M