Newskadai.com
இந்தியா

அயோத்தி வழக்கில் அதிரடி தீர்ப்பு: நீதிபதி ரஞ்சன் கோகோய்யை முதல்வராக்கி அழகு பார்க்க போகும் பாஜக…!!

Share this:

ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் முதன்மையானது நீதித்துறை. பல்வேறு வகைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒரே அமைப்பு நீதித்துறை தான். மதம், இனம், மொழி, சாதி பாகுபாடு பார்க்காமல் சட்டத்தை நிலை நிறுத்தும் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்தியர்களின் கடைசி புகலிடமாக உள்ளது. சமீபகாலமாக நீதித்துறையிலும் அரசியல் புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டது. நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து அரசியல் பதவிகள் அடைவது அதிகரித்து வருகிறது.

 

 

பல காலமாக நடந்து வந்த பாபர் மசூதி வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பிற்கு பின்னர் பாஜக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இப்பொழுது அவரை அசாம் மாநில முதலமைச்சர் வேட்பாளராக பாஜக நியமிக்க உள்ளதாக அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர், “இங்கு எல்லாமே அரசியல் தான். பாபர் மசூதி வழக்கில் பாஜக மகிழும்படி தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகோயை மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆக்கியது பாஜக தலைமை. அடுத்த ஆண்டு அசாமில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் அறிவிக்கப்பட இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.” என்று அசாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் தெரிவித்துள்ளார். அரசியலில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம் ஆனால் நீதியரசர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து லாபம் அடைவது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.


Share this:

Related posts

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் – பிரதமர் மோடி

MANIMARAN M

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI

மீண்டும் உடல் நலக்குறைவு… உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

MANIMARAN M

விவசாயத்திற்கு எதிரான வேளாண் திட்ட மசோதாக்களை நாடு ஒருபோதும் அனுமதிக்காது – ராகுல் காந்தி

MANIMARAN M