Newskadai.com
சினிமா

“மனிதாபிமானமற்றவர்களாகி விட்டோம்”… நடிகர் மாதவன் சாடல்…!!

Share this:

நோய்வாய்ப்பட்ட தன் கணவரை ஆம்புலன்சில் ஏற்றிச்செல்ல உதவிக்காக போராடி கணவரை பறிக்கொடுத்த பரிதாபமான பெண்.

மேற்கு வங்கத்தின் பொங்கோனில் 68 வயதான மாதவ் நாராயண டத்தாவுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு, சனிக்கிழமை மாலை 5 மணியளவில் அருகில் உள்ள
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் கோவிட் -19 நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இரவு 8 மணியளவில் அவர் உடல்நிலை மோசமடைந்ததின் காரணமாக 80 கி.மீ தூரத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரை அழைத்து செல்ல கூறினார்கள். ஆம்புலன்ஸும் ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் வயதான நாரயண டத்தாவால் அதில் ஏற முடியவில்லை.

அவரது மனைவி அவரை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றார், அவராலும் முடியவில்லை.  மனைவி அருகில் இருந்தவர்களிடம் கெஞ்சி உதவி கோரினார், ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.

அருகில் இருந்த பலர் வயதான இருவரும் ஆம்புலன்சில் ஏற போராடுவதைப் பார்த்தார்கள். அங்கே  பிபிஇ உடையில் ஒருவரும் இருந்தார் – ஒருவேளை ஆம்புலன்ஸ் டிரைவர் ஆக இருக்கலாம்.

“அண்ணா நீங்கள் பிபிஇ உடையணிந்து இருக்கிறீர்கள் தயவுசெய்து உதவுங்கள்” என்று முதியவரின் மனைவி அவரிடமும் கதறினார். ஆனால் அவரும் உதவ மறுத்து விட்டார்.

தன் கணவரை ஆம்புலன்ஸில் ஏற்ற பல்வேறு வழிகளில் முயன்றார் அந்தப் பெண். 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு நாராயண டத்தா ஆம்புலன்சில் ஏற முடியாமல் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் “நாம் எவ்வாறு மாறிவிட்டோம், பயம் நம்மை மனிதாபிமானமற்றவர்களாக மாற்றியிருக்கிறது, இச்சம்பவம் என் இதயத்தை நொறுக்குகிறது என்று வருந்தி ட்விட் செய்துள்ளார்.

இறக்கும் மனிதனுக்கு உதவ கூட முன்வராமல், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோமோ என்ற கடும் அச்சத்தை மனிதர்களிடையே இந்த தொற்று நோய் எவ்வாறு ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான ஒரு கொடூரமான மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.


Share this:

Related posts

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

NEWSKADAI

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

ஓடிடி தளத்தில் வெளியாகிறது “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதியுடன் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

AMARA

அந்த விஷயத்தில் தம்பியை மிஞ்சுவாரா செல்வராகவன்?… தனுஷ் பட ஹீரோயினுடன் வெளியான அசத்தல் போஸ்டர்…!!

MANIMARAN M

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

AMARA

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M