Newskadai.com
கேலரி சினிமா

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

Share this:

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் ராணா. பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, தொழிலதிபர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலிப்பதாக கடந்த மே மாதம் அறிவித்தார். அதன் பின்னர் இரு வீட்டாரும் திருமணம் குறித்து சந்தித்து பேசினார். ஆகஸ்ட் 6ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 3 நாள் பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக திருமணத்தை எளிமையாக நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரு வீட்டின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஞ்சள் நிற சோலி, பூவால் அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்களுடன் அட்டகாசமாக பங்கேற்றார் மிஹீகா பஜாஜ், சிம்பிள் குர்தாவில் ராணாவின் முகத்தில் மாப்பிள்ளை களைக்கட்டியது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற மெகந்தி நிகழ்ச்சியில் அட்டகாசமான பிங்க் கலர் லெஹங்காவில் வந்த மிஹீகா பஜாஜ் காண்போர் கண்களை கொள்ளையடித்தார். இதையடுத்து இன்று சரியாக இரவு 9.30 மணிக்கு மேல் ராணா- மிஹீகா திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. தெலுங்கு மற்றும் மார்வாடி கலாச்சார இணைப்பாக திருமணம் நடைபெற்றது.

 லைட் கலர் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட லெஹங்கா, சிவப்பு கலர் துப்பட்டாவில் மிஹீகா தேவதையாக ஜொலித்தார். அதற்கு பொருத்தமாக அதிகமான வேலைப்பாடுகள் மற்றும் கற்கள் கொண்ட நெக்லஸ் காண்போர் கண்களை பறித்தது. சிம்பிளான குர்தாவில் கம்பீரமான மணமகனாக மிஹீகாவின் கையை பிடித்து அக்னியை வலம் வந்தார் ராணா. கோலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த தென்னிந்தியாவே எதிர்பார்த்து காத்துக்கிடந்த ராணாவின் திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது, இதையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறனர்.

 


Share this:

Related posts

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்… விளக்கு ஒளியில் ஜொலிக்கும் இந்தியா… எக்ஸ்குளூசிங் போட்டோஸ்…!!

AMARA

புடவையில் செம்ம கெத்தாக சுற்றும் நயன்தாரா… அழகை வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்…!!

POONKUZHALI

கொரோனாவிலிருந்து மீண்டார் விஷால்… சத்தமே இல்லாமல் எடுத்துக்கொண்ட சூப்பர் சிகிச்சை….!

NEWSKADAI

“மனிதாபிமானமற்றவர்களாகி விட்டோம்”… நடிகர் மாதவன் சாடல்…!!

NEWSKADAI

இடையை விட மெல்லிய சேலையில்… விதவிதமாய் போஸ் கொடுத்து அசத்தும் சாக்‌ஷி…!!

NEWSKADAI