Newskadai.com
தமிழ்நாடு

ராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார் சென்னைக்கு மாற்றம்…

Share this:

ராமநாதபுரத்தில் இரு போதைப்பொருள் கும்பலுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மதச் சம்பந்தமாக நடந்துள்ளது என்ற கருத்தை பலர் சமூக வலைதளம் மூலம் பரப்பி மத மோதலை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் காவல்துறையின் துரித விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை கைது செய்தனர். மேலும், இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என்றும், இந்த சம்பவம் தொடர்பில் எந்தவொரு மதப் பிரச்சனையும் இல்லை என்றும் ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் விளக்கம் கூறினார்.

இந்த விளக்கத்திற்கு பிறகு எஸ்.பி.வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் புதிய எஸ்.பி பொறுப்பில் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி வருண்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை காவல்துறையின் தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் துறையின் எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Share this:

Related posts

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

MANIMARAN M

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

MANIMARAN M

சேலத்திலும் மோடி திட்டத்தில் மோசடி : அதிகரிக்கும் பல கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

பாஜகவில் சேர வந்த ரவுடி… போலீசுக்கு பயந்து தப்பியோட்டம்…

MANIMARAN M