Newskadai.com
அரசியல் சினிமா

இழி துரோக வரலாற்றில் இடம் பெறுவாய்… 800 பட விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை…!

Ramadoss
Share this:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது தோற்றத்தையே அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போல் மாற்றியுள்ள விஜய் சேதுபதியின் மோஷன் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் தமிழராக இருந்தாலும் சிங்களர்களின் கைக்கூலியாக செயல்பட்ட முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் சேதுபதியை வலியுறுத்தி வருகின்றனர்.

800 Movie first Look

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

  • இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளி தரன் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு.

  • முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை, அறியாமையால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை முத்தையா முரளிதரன் துரோகங்களையெல்லாம் நன்றாக அறிந்த பிறகே அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக நீங்கள் பார்க்கப்படுவீர்கள்.

  • ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இராஜபக்சே குடும்பத்தின் புகழ்ந்து பேசுவது தான் அவரின் முழு நேரத் தொழில் ஆகும் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் ஆளுனராக முத்தையா முரளிதரனை நியமிக்கலாமா? என்று இராஜபக்சே சகோதரர்கள் பரிசீலிக்கும் அளவுக்கு அவர்களின் விசுவாசியாக இருந்தவர் முரளிதரன்.

  • முத்தையா முரளிதரன் இனப்படுகொலை செய்தவர்களுக்கும் போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நிற்பவர். இந்த உண்மைகள் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்

vijaysethupathi 800


  • உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது; அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம்.

  • விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது.

  • உங்களுடைய தர்மதுரை படக்குழு கேட்டுக்கொண்டதன் மூலம் அந்த படத்தை பார்த்தேன். கிராமப்புற மக்களுக்காக சேவையாக செய்யும் மருத்துவராக நடித்த உங்களுக்குள் நான் என்னைப் பார்த்தேன்.

  • முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரைமட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள்; மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள்.

  • 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்த போவதில்லை அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார் மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார்

என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

THAVAMANI NATARAJAN

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

NEWSKADAI

“இந்தி திணிப்பிற்கு இடமில்லை, நீட் தேர்வு தேவையில்லை”… அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!

AMARA

‘சீறு’ பட பாடகர் திருமூர்த்தி உட்பட 12 பேருக்கு தொற்று… ஊத்தங்கரையை உலுக்கி எடுக்கும் ‘கொரோனா’…!

AMARA

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

இதோ… வெளியானது பிக்பாஸ் சீசன் 4 2nd புரோமோ.. இந்த முறை பேசியிருக்குறது கமல் இல்ல…!!

AMARA