
நுண் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் வாழும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இளம் வயதில் திருமணம் செய்வதும், தாய்மை அடைவதாலும் நுண் ஊட்டசத்து குறைபாடு ஏற்பட்டு அவர்களின் குழந்தைகளுக்கும் அந்த குறைபாடு தொடர்வதால் இந்தியாவில் நுண் ஊட்டசத்து குறைபாட்டை கட்டுபடுத்துவது அரசுக்கு பெரும் சாவாலாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
நுண் ஊட்டசத்து குறைபாடு பிரச்சனைகள் மட்டுமல்லாது சமூக சீரழிவுகளும் ஏற்படுகின்றது.
பதின்வயதில் உள்ள பெண் குழந்தைகள் காதல் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே காதலில் விழுவதால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி அந்த பெண்ணின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதற்கான தீர்வு பெண்களின் வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்துவது தான் சரியானதாக இருக்கும் என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜூலு மற்றும் பக்தவச்சலாம் அடங்கிய அமர்வு 12.05.2011 அன்று வழங்கிய தீர்ப்பில்… இந்திய பெரும்பான்மையினர் சட்டத்தின்படி ஒரு மைனரின் சொத்துகளுக்கு மற்றும் அவரின் பாதுகாவலராகவோ மற்றொருவர் நியமிக்கும் போது மைனருக்கு 21 வயது நிறைவடைந்தால்தான் அவர் மேஜர் ஆகிறார். எனவே இதனை தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்த முடிவை அரசு எடுக்கவேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து.
இதே போன்ற வழக்கில் 2014 ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரவி, மற்றும் மணிக்குமார் ஆகியோர் அமர்வு பெண்கள் வாக்குரிமை மற்றும் ஓட்டுனர் உரிமம் பெருவதற்க்காக மட்டுமே 18 வயது பொதுமானதாக இருக்கும். திருமணம் செய்வதற்கு அவர்களின் உளவியல் முதிர்ச்சி சரியாக இருக்காது ஆகவே பெண்களின் திருமண வயதை 21 உயர்த்துவது குறித்து அரசு ஆராய வேண்டும் என பரிந்துரைத்தது. சட்ட ஆணையமும் 2018-ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் சாதனைகளை படைத்து வருகிறார்கள். எனவே பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்திட மத்திய அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என தன்னுடைய அறிக்கையில் பாமக நிருவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.