Newskadai.com
தமிழ்நாடு விளையாட்டு

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

Share this:

இந்திய அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள் வழங்கபடுகிறது. இந்த ஆண்டு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு சேலத்தை சேர்ந்த மாற்றுதிறனாளியான தடகள வீரர் மாரியப்பனுக்கு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Salem Mariyappan

சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளியான மாரியப்பன் கடந்த 2016 ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் கேல் பாரத ரத்னா விருதுக்கு ஐந்து பேரின் பெயர்களை பரிந்துரை செய்தது அதில் தமிழக தடகள வீரரான மாரியப்பன் பெயரும் இடம்பெற்றிருந்தது, இதன் அடிப்படையில் மாரியப்பனுக்கு மத்திய அரசின் கேல் பாரத ரத்னா விருது வழங்கபடுவதாக அறிவித்துள்ளது. இவருக்கு, ‘ராஜிவ் காந்தி கேல் ரத்னா’ விருது வழங்கப்படுவதை தொடர்ந்து ஆகஸ்ட் 29ல், தேசிய விளையாட்டு தினத்தன்று இவரை தவிர, மேலும் 29 பேருக்கு ‘அர்ஜுனா’ விருது வழங்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தடகள வீரர் மாரியப்பன் தனக்கு கேல் பாரத ரத்னா விருது கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இவ்விருதினை தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்த அவர் தனக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து ஊக்குவித்தால்தான் என்னால் சாதிக்க முடிந்தது எனவும், கிராமபுற இளைஞர்கள் பல்வேறு திறமைகளுடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பயிற்சி அளித்தால் அவர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

மாரியப்பனுக்கு விருது கிடைத்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சியினர் அவரை பாராட்டி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியினை அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தற்போது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பெங்களூரில் இயங்கி வரும்  சாய் விடுதியில் பணிபுரிந்து கொண்டே தடகல பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


Share this:

Related posts

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M

மீண்டும் ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

THAVAMANI NATARAJAN

அதிரடி சரவெடி: 40 சதவீத பாடங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்…!!

MANIMARAN M

13 வது ஐ.பி.எல் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்குகிறது…

MANIMARAN M

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M