Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

பாஜகவின் திட்டத்தை தவிடுபொடியாக ரஜினிகாந்த்… மு.க.அழகிரிக்கும் சேர்த்து வைத்த ஆப்பு…!

Rajinikanth
Share this:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் பல ஆண்டு காத்திருப்பும் பஞ்சு, பஞ்சாய் பறந்தது போல் சமீபத்தில் வெளியான அறிக்கையால் தவிடு பொடியானது. அதில் மருத்துவர்கள் ரஜினியின் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. அது தன்னுடைய அறிக்கை இல்லை எனக்கூறிய ரஜினிகாந்த், ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை தான் என்றும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

mk alagiri DMK

ரஜினி என்கிற ஆயுதத்தை வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கனவு கோட்டையை கட்டவிருந்த பாஜக இதனால் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து மு.க. அழகிரி கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கு பின்புலனாக இருந்து ரஜினிகாந்த் ஆதரவளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் மு.க.அழகிரியுடன் போனில் பேசிய ரஜினிகாந்த் திமுக தன்னுடைய அரசியல் வருகையை விரும்பவில்லை என்பதையும், அதனால் உருவாகும் நெருக்கடியையும் தெரிவித்துள்ளாராம்.

bjp

இதனால் ஆவேசமான அழகிரி யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் கட்சி தொடங்குவது உறுதி என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்கும் எண்ணத்தில் இல்லவே இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் மு.க.அழகிரிக்கு ஆதரவாக செயல்படும் எண்ணத்தையும் கைவிட்டு விட்டாராம். இதை கேள்விப்பட்ட பாஜக தலைமை செம்ம அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்- மு.க.அழகிரியை வைத்து திமுகவின் அரசியல் ஆசையை தவிடு பொடியாக்க நினைத்த பாஜக தற்போது அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அதிரடி ஆலோசனையில் இறங்கியுள்ளார்களாம்.


Share this:

Related posts

பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சமா?… அதிர்ச்சியான மக்கள்… வீடியோ விட்டு சரண்டரான எம்.எல்.ஏ….!

MANIMARAN M

பசுமை வீட்டில் 4 ஆண்டுகளாக அரங்கேறிய அட்டூழியம்… ஆப்புவைத்த இளைஞர்…!

THAVAMANI NATARAJAN

குப்பைத் தொட்டியில் வெள்ளிக் கிரீடம் : தூய்மை பணியாளரின் நேர்மை..!!!

MANIMARAN M

சேலத்தில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… 4வது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

ராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார் சென்னைக்கு மாற்றம்…

MANIMARAN M

விரைவில் சென்னை – கன்னியாகுமரி கடல்வழிப் போக்குவரத்து – மத்திய அரசு அதிரடி…!

MANIMARAN M