Newskadai.com
சினிமா

#BREAKING ‘ஓவரா கூவாதீங்கப்பா ‘ அபராதத்தோட ரஜினி வரி கட்டிட்டாரு… இதோ பாருங்க ரசீது…!

Rajinikanth
Share this:

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸ் எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.

kabali rajinikanth

கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும், மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளதாகவும் அந்த மனுவில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

மேலும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக தன் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது.

warned rajinikanth for ragavendra hall

அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீண்டிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் எனவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா?, நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்தனர். இதையடுத்து ரஜினி தரப்பில் இருந்து வாபஸ் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Rajinikantha Hall

இன்றுடன் வரி செலுத்தாவிடில் 2 சதவீத அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரியை செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் முதல் நடப்பு மாதம் வரை நிலுவையில் இருந்த 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கான வரியை முறையாக செலுத்தியுள்ளார். இதில் சரியான நேரத்தி; வரி செலுத்ததற்காக ரஜினியிடம் இருந்து 9 ஆயிரத்து 386 ரூபாய் வசூலிக்கப்பட்டதும் கொட்ட எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதற்காக ரஜினிகாந்திற்கு சென்னை மாநகராட்சி வழங்கிய ரசீது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Share this:

Related posts

இந்தியன் 2 கிரேன் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் கொடுத்த ரூ.4 கோடி நிதி உதவி…!!

AMARA

பிரதமரையே அதிர்ச்சியடைய வைத்த பிரபல பாடகரின் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

‘வடிவேல்’ பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்… துக்கத்தில் தோள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

AMARA

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

உங்கள நினைச்சி சிரிக்கிறதா? கோவப்படுறதா? தெரியலையே சேதுபதி… மடலில் மறைமுகமாக சாடிய பாரதிராஜா…!

NEWSKADAI