Newskadai.com
சினிமா

“தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்”… ரசிகர்களை அடக்க சாட்டையை சுழட்டும் ரஜினி…!!

Share this:

அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என குழப்பத்தில் இருந்த உலக நாயகன் கமல் ஹாசன் கூட மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து அரசியல் வட்டாரத்திலும் ஒரு புள்ளியாக ஃபார்ம் ஆகிவிட்டார். சினிமாவில் இப்போது ஸ்ட்ராங்காக அடித்தளம் போட்டிருக்கும் அஜித், விஜய் அரசியலிலும் கால் பதிக்க வேண்டுமென அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து நச்சரித்து வருகின்றனர். சமீப காலமாக விஜய்யை வம்படியாக அரசியலுக்கு அழைத்து விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் விஜய் மற்றும் அவருடைய அப்பா எஸ்.ஏ.சி மேற்பார்வையில் தான் நடப்பதாக கூறப்படுகிறது.

தற்போது போஸ்டர் போரில் இணைந்துள்ள சூர்யா ரசிகர்கள் உள்ளூர் அரசியல் எல்லாம் எங்களுக்கு செட் ஆகாது உலக அரசியல் தான் என்பது போல், சேகுவேரா உருவத்தில் சூர்யாவை வைத்து டிசைன் செய்த போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்படி அனைவரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை வைத்து சதுரங்கம் ஆடி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் ரஜினி மக்கள் மன்றத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது அவருடைய தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்தது.

vijay
vijay

 

போஸ்டருக்கு பெயர் போன மதுரையில் ரஜினியை உசுபேற்றி விடுவதற்காக முதலில் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக அரசியலை ஆரம்பிக்க அரைக்கூவல் விடுத்து, இப்ப இல்லைன்னா, எப்பவும் இல்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டப்படும் நிலையில், தலைமையிடம் இருந்து அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைமையில் இருந்து உத்தரவு வரும்வரை போஸ்டர் அடிக்க வேண்டாம் என்றும், தன்னிச்சையாக செயல்பட கூடாது என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சுதாகர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழகத்தில் தலைவரால் மாற்றம் வரும் என காத்திருந்த தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Share this:

Related posts

சுஷாந்த் சிங் மரண வழக்கு… அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்…!!

AMARA

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

NEWSKADAI

திரும்பி வருவாரா எஸ்.பி.பி?… கண்ணீர் மல்க பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா…!

NEWSKADAI

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… முன்னணி இயக்குநர்கள் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..!!

THAVAMANI NATARAJAN

“சீக்கிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

AMARA

காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

AMARA