Newskadai.com
அரசியல் இந்தியா

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

Share this:

அரசியல் சதுரங்கத்தில் திரைமறைவில் நடக்கும் பல வேலைகள் சாமானியர்களுக்கு தெரிய வருவதில்லை. பல நேரங்களில் எந்த உண்மையும் தெரியாமலேயே மக்களாகிய நாம் முட்டாள்களாக ஆக்க படுகிறோம். ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் அரசியல் சித்து விளையாட்டுகளும் இப்படித்தான். துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வருக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியது, கோழி அடை காப்பது போல முதல்வர் அசோக் கெலாட் எம்எல்ஏக்களை அடைகாத்து திரிந்தது, பிஜேபியின் கதகளி ஆட்டம், கவர்னரின் கரகாட்டம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். கொரோனா தொற்று காலத்தில் ஒரு மாநில முதல்வரை மக்களுக்கான கடமையைச் செய்யவிடாமல் தனது பதவியைக் காத்துக் கொள்ளும் போராட்டத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்த்தது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு. பாவம் ராஜஸ்தான் மக்கள்.

மத்தியபிரதேச பாணியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து ராஜஸ்தானிலும் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் முழுமையாக நம்பினார். நாமும் நம்பினோம். நேற்று இரவு பிஜேபிக்கு கெட்ட இரவாகவும் காங்கிரசுக்கு நல்ல உறவாகவும் அமைந்தது. யாரும் எதிர்பாராத விதமாக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூவரையும் சந்தித்து தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர். பிரச்சனைகளை களைய பிரியங்கா காந்தி, அகமது பட்டேல், கே. சி. வேணுகோபால் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார். சோனியாவின் இந்த ஏற்பாடு சச்சின் பைலட் டீமை திருப்தி படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பிய சச்சின் பைலட், “தான் போராடியது பதவிக்காக அல்ல, சுயமரியாதைக்காக. எனது உணர்வுகளை புரிந்து கொண்ட தலைமை அதை தீர்ப்பதற்கு ஒரு குழு அமைத்துள்ளது. அதை நான் வரவேற்கிறேன். ஐந்து ஆண்டுகள் போராடி ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தோம் அதை இழக்க மாட்டோம்.” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். சச்சின் பைலட் இப்போது எடுத்த முடிவை முன்பே எடுத்திருந்தால் ராஜஸ்தான் அரசின் காலம், பணம் விரயம் ஆகியிருக்காது. அரசியல் சதுரங்கத்தில் திரைமறைவில் நடக்கும் பல வேலைகள் சாமானியர்களுக்கு தெரிய வருவதில்லை. பல நேரங்களில் எந்த உண்மையும் தெரியாமலேயே மக்களாகிய நாம் முட்டாள்களாக ஆக்க படுகிறோம்.


Share this:

Related posts

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

THAVAMANI NATARAJAN

சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட “தேச விரோத பல்கலைக்கழகம்”…

MANIMARAN M

ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸ்… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

THAVAMANI NATARAJAN

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN