கடந்த புதன்கிழமை இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெற்றது. 225 நாடாளுமன்ற இடங்களைக் கொண்ட இலங்கையில் 196 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைப்பெற்றது. நேற்று 64 மையங்களில் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. 71% வாக்குகள் பதிவான நிலையில், 60% வாக்குகள் பெற்று 145 இடங்களில் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க:http://கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலி போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி 2.15% வாக்குகள் மட்டுமே பெற்று 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, சஜித் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வாக்குகளைப் பெற்று 2ஆம் இடத்திலும், ஜெஜெபி கட்சிக்கு மூன்றாம் இடமும், 2.82% வாக்குகளுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு 4ஆம் இடமும் பிடித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் அமோக வெற்றிப் பெற்ற ராஜபக்சவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.