Newskadai.com
தமிழ்நாடு

இதுவரை இல்லாத அளவிற்கு மழை தீவிரமா வெளுத்து வாங்கப்போகுது…!!

Rain
Share this:

தெற்மேற்கு பருவகாற்றால் கடந்த சில வாரங்களாக  மழை தாருமாறாக கொட்டி தீர்தது, இதனை தொடர்ந்து  தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனத்த  மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும்  மேற்கு வங்காள கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த  தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
rain
ஆகஸ்டு 14 (இன்று) முதல் 16ம் தேதி வரை, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர கடலோரப்  பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.  அதோடு ஆகஸ்டு 14-18 ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேக்த்திலும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே மீனவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

Related posts

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

AMARA

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை…. உற்சாக வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்..!!

AMARA

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

MANIMARAN M

நாளை மறுநாள் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI