கடந்த சில வாரங்களாகவே சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் ஊரடங்கில் வேலையில்லாததாலும் போதுமான அளவுக்கு வருமானம் இல்லாமலும் திண்டாடும் மக்களுக்கு சில வாரங்களாக பெய்த மழை மனதிற்கு ஜில் என்று உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை. வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வாணிலை மையம் அறிவித்துள்ளது.
புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவகாற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க, வடக்கு அந்தமான பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், ஒடிசா, மற்றும் மேற்கு வங்காளம் கடலோரப் பகுதிகள், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த
காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவு மழை பெய்த மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் தேவாவின் 15 சென்டி மீட்டர் மழையும், அவலாஞ்சியில் 10
சென்டி மீட்டர் மழையும், கூடலுரில் 9 சென்டி மீட்டர் மழையும் ,பந்தலுரில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது.