Newskadai.com
இந்தியா

அபராதம் மூலம் அபார வருவாய் ஈட்டிய ரயில்வே… டிக்கெட் இல்லாத பயணிகளிடம் ரூ.561 கோடி வசூல்…!!

Share this:

கடந்த ஓராண்டில் செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ.561.73 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் தாக்கல் செய்த ஆர்டிஐ கேள்விக்கு பதிலாக இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

டிக்கெட் இல்லாத பயணத்தைத் தடுக்க இந்திய ரயில்வே பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில்,

  • டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் ஒரு பயணி டிக்கெட்டின் விலையுடன் குறைந்தபட்சம் ரூ.250 அபராதமும் செலுத்த வேண்டும்.
  • பயணி அபராதம் செலுத்த மறுத்தால், அவர் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் (ஆர்.பி.எஃப்) ஒப்படைக்கப்படுவார்.

  • அவர்மீது ரயில்வே சட்டத்தின் பிரிவு 137 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
  • அதன் பிறகு, அவர் ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார். மாஜிஸ்திரேட் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கலாம்.
  • அங்கும் அவர் அபராதம் செலுத்த மறுத்தால், ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படுவார்.

இந்நிலையில், 2019-2020 ஆம் ஆண்டில், 1.10 கோடி பயணிகள் செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அபாரத தொகை ரூ.561.73 கோடியாகும். இது 2018-2019 அபராத தொகையை விட 6 சதவீத கூடுதல் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டில் செல்லுபடியாகும் பயண டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து ரூ.1,938 கோடியை ரயில்வே வசூலித்துள்ளது.
2016-17 ஆம் ஆண்டில் ரூ.405.30 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ.441.62 கோடியும்
2018-19 ஆம் ஆண்டில் ரூ.530.06 கோடியும், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.561.73 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அபராத தொகை 38% அதிகரித்துள்ளது.


Share this:

Related posts

இந்திய எண்ணெய் கப்பல் தீயை அணைக்க போராடும் இந்திய, இலங்கை, ரஷ்ய கடற்படை வீரர்கள்….

MANIMARAN M

“இதுவரை பக்க விளைவுகளே இல்லை”… இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து…!!

MANIMARAN M

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.!!

THAVAMANI NATARAJAN

காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த இந்துக்கள்… மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

NEWSKADAI

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI