Newskadai.com
இந்தியா

மோடியின் ஈகோவிற்கான பரிசு… பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…!

Share this:

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், டெல்லியில் இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இக்கூட்டத் தொடரில், கொரோனா அதிகரிப்பு, நீட் விவகாரம், லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்களில் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி திட்டமிடப்படாத பொது முடக்கம் தனி மனிதன் ஒருவரின் ஈகோவின் பரிசு என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ” நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் 50 லட்சத்தினை கடந்துவிடும் என்றும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 லட்சத்தினை கடக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் திட்டமிடப்படாத பொது முடக்கம் தனி மனிதன் ஒருவரின் ஈகோவின் பரிசு. இதுவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலுக்கு வழி வகுத்தது. தங்கள் உயிரை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும், ஏனெனில் நாட்டின் பிரதமர் மயிலுடன் பிஸியாக உள்ளார்” என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

நவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும்… கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை கிழித்தெறிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

MANIMARAN M

“ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…

MANIMARAN M

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M